கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் / சீனா: வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து 13 பேர் பலி


கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர்-
கொலம்பியா நாட்டிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கடந்த வெள்ளிக்கிழமையன்று புரட்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் இத்தகவலை நேற்றுதான் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஏஞ்சல் சான்செஸ் பெர்னாண்டஸ், மரியா கன்செப்சியான் மர்லாஸ்கா செடானோ ஆகிய இருவரும் கடந்த வெள்ளிகிழமையன்று வெனிசுலா நாட்டின் எல்லை அருகில் உள்ள லா குவாஜிரா என்ற இடத்தின் அருகில் வந்து கொண்டிருந்த போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தியவர்களின் வீட்டிற்குத் தொடர்பு கொண்ட தீவிரவாதிகள் தங்களை பார்க் என்ற குழுவின் இடது பிரிவினர் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்களில் ஈடுபட்டிருந்த பார்க் குழு, தாங்கள் கடத்தியவர்களை விடுவித்ததோடு இதுபோன்ற கடத்தல்களில் இனி ஈடுபடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.
ஆயினும், இந்தக் குழுவினரின் பெயரில் தனிப்பட்ட கும்பல் ஒன்று பணம் பெறும் நோக்கத்துடன் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
ஸ்பெயின் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோஸ் மானுவேல் கர்சியா மார்கலோ, அரசு அவர்களை மீட்பது குறித்தான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அது தவிர மற்ற விபரங்கள் குறித்து அவர் விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
பார்க் புரட்சியாளர்கள் குழுவினர் தங்களது ஐம்பது வருட கால பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டி அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சீனா: வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து 13 பேர் பலி- 
கிழக்கு சீனாவின் ஷண்டாங் மாகாணம், கவ்பான் நகரில் அரசுக்கு சொந்தமான வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 163 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் வெடிகள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
அதிர்ச்சியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமாகியது. இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரும் சிக்கிக் கொண்டுள்ளனரா? என்று தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger