கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல அயோடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கூடுதல் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவு வகையையும் கர்பிணித் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
அயோடின் சத்து மிக அதிக அளவில் உள்ள கடற்பாசி சார்ந்த உணவுகளை கர்பிணிகள் உட்கொள்ளும் போது, தேவையான அளவுக்கு கூடுதலாக அது உடலில் சேரும் போது அதுவும் நல்லத்தல்ல என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தவிர்க்கப்படக் கூடிய மூளை பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு கடுமையான அயோடின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கருதப்படுகிறது.
Post a Comment