லெபனானின் திரிபோலி பகுதியில் உள்ள பாப் அல் தபாநாவில், சிரியாவின் அதிபர் ஆசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் சன்னி பிரிவினரும் , ஜபால் முஷின் பகுதியில் அதிபரை ஆதரிக்கும் ஆலவைட் பிரிவினரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மாத ஆரம்பத்தில், இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட சண்டையில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மீண்டும் சென்ற ஞாயிறு அன்று, இவர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில், இரண்டு லெபனான் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்று இரவு நடைபெற்ற சண்டையில், 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்னால்தான் காவல்துறையினர் பிரதான வீதிகளில் ரோந்து சென்றுள்ளனர். பெரும்பான்மையான சன்னி முஸ்லிம் மக்கள் வாழும் நகரமாக திரிபோலி இருந்தபோதிலும், ஷியா முஸ்லிம் பிரிவின் ஒரு பகுதியான ஆலவைட் பிரிவினரும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்துவருகின்றனர்.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். சிரியாவில் இருந்து தப்பி வந்த அகதிகளும் தற்போது திரிபோலியில் பெருமளவு காணப்படுகின்றனர். எனவே, அண்டை நாடான சிரியாவில் காணப்படும் இனக்கலவரங்கள் எல்லை தாண்டி லெபனானிலும் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டின் சமூகத் தலைவர்கள் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.
Post a Comment