10 ஆண்டுகளாக கடத்தி, அடைக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர்



பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சில பெண்களை கடத்தி, எவருக்கும் தெரியாமல் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த மூன்று சகோதரர்கள் மீது அமெரிக்கப் பொலிஸார் குற்றச்சாட்டுக்களை பதியவுள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தில் கிளிவெலாண்டில் உள்ள ஒரு வீட்டில் இந்த பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.
அமெண்டா பெர்ரி, ஜினா டேஜீஸஸ் மற்று மிச்சேல் நைட் ஆகிய மூன்று பெண்களும் பத்து ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தனர். ஆனால் தற்போது ஏரியல் காஸ்ட்ரோ என்பவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
அந்த வீட்டில் இருக்கையில் அமெண்டா பெர்ரிக்கு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்கு தற்போது ஆறு வயதாகிறது. அந்தக் குழந்தையும் மீட்கப்பட்டிருக்கிறது.
சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள்
இந்த விவகாரம் குறித்து மேலும் ஆழமாக விசாரணைகளைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னதாக பொலிஸாருக்கு அண்டை வீட்டார்களால் சில முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காதமை குறித்தும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger