கர்நாடக தேர்தல் : காங்கிரஸ் முன்னணியில்



கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 116 இடங்களில் முன்னணியில் உள்ளது. அங்கு தனியாக ஆட்சியமைக்க அந்தக் கட்சிக்கு 112 இடங்கள் மாத்திரமே தேவையாகும்.
36 இடங்களில் மாத்திரம் முன்னணியில் இருக்கும் பாஜக மூன்றாவது இடத்திலேயே உள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக இருக்கும் கர்நாடகாவில் பாஜகவே தற்போது ஆட்சியில் உள்ளது. ஆனால், மாநில கட்சி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அந்தக் கட்சி தோல்வியை தழுவுகிறது. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி 110 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.
இரண்டாவது இடத்தில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்கின்றது.
தமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் முன்னாள் முதல்வரான சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தேவகவுடா அல்லது எதியூரப்பா ஆகியோரின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சியை அமைக்க முடியும்.
மொத்தமுள்ள 224 இடங்களில் 223 இடங்களில் மாத்திரமே அங்கு தேர்தல் நடந்தது.
தமது கட்சி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக முக்கிய காங்கிரஸ் பிரமுகரான சீதாரமையா கூறியுள்ளார்.
முழுமையான முடிவு இன்று பிற்பகலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger