சம்பந்தனை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர் அஸ்வர்! -N.M.றம்ழான்-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் N.M.றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் N.M.றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்று நாட்டில் நலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று முஸ்லிம் சமூகம் அடிமைச் சமூகமாக அமைச்சர்கள் இருந்தும் அனாதைகளாக தங்களது மத அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாது அச்சத்தோடு வாழ்ந்து வருகின்ற இக்கால கட்டத்தில் வாய் திறந்து பேச வேண்டிய இடத்தில் பேச முடியாத ஊமைகளாக முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பயந்தான் கொள்ளிகளாக இருக்கின்ற போது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
தனது பாராளமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும் மிகவும் சுதந்திரமாக நடந்தேறும் பல்வேறு அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத முதுகெலும்பு இல்லாத கையாலாகாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் முஸ்லிம் மக்கள் மீது இழைக்கப்படும் மத அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுத்த இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பது வேடிக்கையானது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் இன்று என்ன செய்கின்றார்.
இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எத்தனையோ அநீதிகள் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அதற்காக ஒரு முறையேனும் குரல் கொடுத்தாரா? அல்லது தடுத்து நிறுத்தினாரா? எததையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் பற்றி ஒரு துளியேனும் கவலைப்படாது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களை விமர்சிப்பதும் தனது சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுப்பதும் ஏனையவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்து எடுக்கும் நல்ல பல தீர்மானங்களை அதிகாரத் தரப்பினரிடம் போட்டுக் கொடுத்து தனது விசுவாசத்தை காட்டி வயிறு வளர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களை ஒரு முஸ்லிம் என்று கூறுவதில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதேபோன்று இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டு விட்டு தில் இல்லாத ஒரு சில அரசியல் கோமாளிகள் சம்மாந்துறைக்கு வந்து சாமர்த்தியமாக கதை சொல்கின்றார்கள்.
தான் பேச வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்ததாகவும் தான் தனது வாழ்நாளில் அரசியலுக்காக என்றும் பொய் கூறியது கிடையாது என்று கூறுகின்ற முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் தனது சகோதர இனம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் நிர்க்கதியான இலங்கைப் பெண்கள் ஒலெய்யா முகாமில் தஞ்சம்-
சவுதியில் நிர்க்கதிக்குள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 800 பேர் அங்குள்ள ஒலெய்யா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சவுதியில் நிர்க்கதிக்குள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 800 பேர் அங்குள்ள ஒலெய்யா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொழில் வாய்ப்புக்களுக்காக சவுதி அரேபியா சென்று நிர்க்கதிக்குள்ளான பணிப்பெண்கள் குறித்த முகாமில் உரிய இட வசதிகளின்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய தெரிவிக்கையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தத்தமது தொழில் வழங்குநர்களிடமிருந்து தப்பி வந்தவர்களில் பெரும்பாலானவர்களே ஒலெய்யா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகள் போதுமானளவு செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், பணிப்பெண்கள் என்ன அடிப்படையில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறித்து தாம் ஆராயவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Post a Comment