இலங்கையில் 2012ஆம் ஆண்டு மட்டும் 1740 பலாத்கார வழக்குகள் பதிவு-
2012ஆம் ஆண்டு 1740 பலாத்கார வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் 1464 வழக்குகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக காணப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள தரவுகள் தெரிவித்துள்ளன.
2012ஆம் ஆண்டு 1740 பலாத்கார வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் 1464 வழக்குகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக காணப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள தரவுகள் தெரிவித்துள்ளன.
அறிவிக்கப்பட்ட வல்லுறவு வழக்குகளில் 89 சதவீதமானவற்றில் பாதிக்கப்பட்டவர்களாக பெண்களேயாவர். 11 வீதமானவற்றில் ஆண்களே பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
இவற்றில் ஒரு வழக்கு தவிர ஏனையவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆண்களாக காணப்படுகின்றனர்.
96 சதவீதமான வழக்குகளில் துஷ்பிரயோகம் செய்தவர் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவராக இருந்துள்ளார்.
அதிகமாக இவர்கள் உறவினர்களாக, கருக்குடும்ப அங்கத்தவர்களாக, அயல்வராக, காதலனாக, சமயத்தலைவர்களாக மற்றும் பாடசாலை ஆசிரியராக காணப்படுகின்றனர்.
சிறுவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக 1159 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான மிகமோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் 723 இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் வைத்தியசாலைகளிலும் கல்விகற்க ஏற்பாடு-
சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு வைத்தியசாலைகளிலேயே கல்வி புகட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு வைத்தியசாலைகளிலேயே கல்வி புகட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதற் கட்டமாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக 4 சிங்கள மொழிமூல ஆசிரியர்களையும் ஒரு தமிழ் மொழிமூல ஆசிரியரையும் நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
புதிதாக கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் 5 ஆசிரியர்கள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Post a Comment