சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது / மணலாறில் சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதி; ஜனாதிபதி வழங்கி வைப்பு / கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருமென நாமல் ராஜபக்ச எம்.பி எதிர்பார்ப்பு


 

Print Friendly
rape-01சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது-
புத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ் இளைஞன் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியை கடத்தி நொச்சியாகம பிரதேசத்திற்குச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாதம்பே பிரதேசத்தில் உள்ள சட்டத்தரணி ஒருவர் முன் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்ட பின்னரே தான் இந்த சிறுமியுடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருவதாக கைது செய்யப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தற்போது பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை எனவும், சிறுமி திருமண வயதை அடைந்ததன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக தாங்கள் இருவரும் தீர்மானித்துள்ளதாக அவ் இளைஞன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் திருமண வயதை அடையாத சிறுமி ஒருவருடன் கணவன் – மனைவியாக வாழ்வது சட்டவிரோதமானது என கூறிய மாதும்பே பொலிஸார் அவ் இளைஞனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.
மணலாறில் சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதி; ஜனாதிபதி வழங்கி வைப்பு-
தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பகுதியில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காணி உரிமைப் பத்திரங்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வெலிஒய சம்பத்நுவர மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையின் மொரவௌ, ஹெலெம்பவௌ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் காணி உறுதிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மணலாறின் பெரும்பாலான தமிழ் கிராமங்களில் இருந்து 1984ம் ஆண்டு படையினரால் தமிழர்கள் விரப்பட்ட நிலையில், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
பின்னர், புலிகளின் அச்சுறுத்தல்களால் சிங்களக் குடியேற்றவாசிகள் கணிசமாக இடம்பெயர்ந்து சென்ற போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர் படையினர் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் மீளக்குடியேற்றப் பட்டுள்ளனர்.
தமிழர்கள் விரட்டப்பட்ட பின்னர், மண்கிண்டிமலை (ஜனகபுர), நாயாறு, கொக்கிளாய் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காணிகள் சொந்தமாக வழங்கப்பட்டுள்ளன.
கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருமென நாமல் ராஜபக்ச எம்.பி எதிர்பார்ப்பு- 
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் இடம்பெறும் என்ற நம்பிக்கை அரசுக்கு இன்னமும் இருந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக டுவீட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாமல், அனைவருமே போரினால் துன்பமுற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். அது மீண்டும் நிகழ்வதை அரசு அனுமதிக்காது.
நாட்டில் சகல இன மக்களும் ஒன்றாக சமாதானமாக வாழ வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம். இலங்கை அமைதியை விரும்பும் நாடு.
இங்கே 2 கோடி மக்கள் அமைதியாக ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். இன, மத, சாதி வேறுபாடுகள் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger