ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளரின் திருமணத்தை அங்கீகரிக்கும் பொருட்டு சட்டமூலம்மொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.
இதன்போது அளிக்கப்பட்ட 77 மொத்த வாக்குகளில் 44 சட்டமூலத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த உலகின் 13 ஆவது நாடாக நியூசிலாந்து பதிவானது.
நெதர்லாந்து, பெல்ஜியம் ஸ்பெய்ன் கனடா, தென்னாபிரிகா, நோர்வே, சுவீடன் போர்த்துக்கல், ஐஸ்லாந்து, ஆர்ஜண்டீனா டென்மார்க் ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் ஏற்கனவே சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உருகுவேயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கின்றன்மை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment