அமெரிக்காவில் மீண்டும் வெடிப்பு: 70 பேர் பலி?



அமெரிக்காவின் டெக்சஸின் வாகோ  பகுதியில்  அமைந்துள்ள தாவரங்களுக்கான உரம் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும் இதில் சிக்கி 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு மிகுந்த சக்திமிக்கதெனவும் இதனால் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/image_article/18texas_web1-articleLarge.jpg

விபத்து இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

http://www.virakesari.lk/image_article/hedstrom20130418032439190.jpg

இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நேற்று முன் தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
http://www.virakesari.lk/image_article/explosionssffsfsfr444.jpg

அச்சம்பவம் இடம்பெற்று சில தினங்களில் இவ் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger