அழகாக இருந்த ஆண்களை வெளியேற்றிய சவுதி மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் / சுவிஸ்: 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய பொன் முட்டை மீட்பு; திருடியவர்கள் கைது


Print Friendly
gold_eggசுவிஸ்: 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய பொன் முட்டை மீட்பு; திருடியவர்கள் கைது 
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் வைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய தங்க முட்டை திருடு போனது. இதனால் சுவிஸ் எல்லைக்காவல் பகுதியில் பொலிசார் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்த BWM என்ற காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து அந்த ஃபேபர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பான தங்க முட்டை கிடைத்தது.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது, நாங்கள் அந்த முட்டையை கீழே கிடந்து எடுத்ததாகவும், சந்தையில் மலிவான விலைக்கு விற்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
பொலிசார் இவர்களை நம்பவில்லை. இவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு பொருட்களைத் திருடி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிடுவது வழக்கம் என்று பொலிசார் கருதினர்.
எனவே திருடிய பொருளை வைத்திருந்தது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது என்ற வழக்குகளின் கீழ் அந்த காரில் இருந்த மூன்று இளைஞர்களையும், பொலிசார் கைது செய்தனர். இதற்கு முன்னர் நடந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் பொலிசார் இவர்களைத் தேடி வந்துள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள குவைத் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் இருந்து கடந்த 2009ம் ஆண்டில் ஒரு கிலோவுக்கும் அதிகமாக தங்கத்தினாலான இந்த முட்டையை இவர்கள் கொள்ளையடித் துள்ளனர். இந்த முட்டையில் நூற்றுக்கணக்கான ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அழகாக இருந்த ஆண்களை வெளியேற்றிய சவுதி மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார்-
சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின் பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.
ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப் பட்டதுடன் பல்வேறு பிரதிநிதிகளும் நிறுத்தப்பட்டனர்.
ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக் கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger