‘பெண்ணின் நடுவிரலை கடித்து விழுங்கிய ஆண்’ / பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம் / இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி



 

Print Friendly
news-005‘பெண்ணின் நடுவிரலை கடித்து விழுங்கிய ஆண்’-
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறி அது முற்றிபோன நிலையில் பெண்ணொருவரின் நடுவிரலை (பாம்பு விரல்) ஆண்ணொருவர் கடித்து விழுங்கிய சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை, மீஹாகிவுல கரமெட்டிய என்ற இடத்தைச்சேர்ந்த பெண்ணொருவரின் நடுவிரலொன்றே ஆண்ணொருவரினால் இவ்வாறு கடித்து விழுங்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
தனது நடுவிரலை இழந்த பெண் கந்தக்கெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கந்தகெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறு பிள்ளைகளுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவமொன்றை அடிப்படையாககொண்டே இருபிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டவிசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கையொன்றின் நடுவிரல் இன்றி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துண்டாடப்பட்ட விரலை சத்திர சிகிச்சையின் மூலமாக பொருத்துவதற்கு வைத்தியர் விரலை கேட்ட போதே தனது விரலை அந்த ஆண் கடித்து விழுங்கிவிட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்’
பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்-
பொதுநலவாய மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று, பொதுநலவாய அமைப்பின் சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் 18 வது சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் சட்ட வல்லுநர் சங்கம், பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இது, சர்வதேச அளவிலான தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் வழக்குரைஞர் சங்க மாநாட்டில், பொதுநலவாய சட்டக் கல்வி கூட்டமைப்பு, பொதுநலவாய நீதவான் மற்றும் நீதிபதிகள் அமைப்பு ஆகியவையும் பங்கேற்று தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்தத் தீர்மானத்தில், வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவது, பொதுநலவாய அமைப்பின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்படும் தன்மையை ஏற்படுத்தும் என்றும், எனவே வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவது தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு யோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் 26ம் திகதி நடைபெறும் பொதுநலவாய அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி-
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலையின் வீழ்ச்சியின் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் இம்மாத ஆரம்பத்தில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 52116 ரூபா 88 சதமாக இருந்த போதிலும் கடந்த சில தினங்களாக 43480 ரூபா 96 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger