கல்முனையில் திறக்க இருக்கும் பொதுபல சேனா காரியாலயம் - டிலந்த




பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் காரியாலயம் ஒன்றை அமைக்க உள்ளதாக அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே  சகோதர இணையத்துக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அவர்கள் நாடு திரும்பியதும் கல்முனையில் காரியாலயம் அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்முனை யிலிருந்து நேற்றைய தினம் பொது பல சேன அலுவலகத்திற்கு வருகை தந்த சிலர் கேரிக்கை விடுத்ததை அடுத்தே அங்கு அலுவலகம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுபலசேனா அமைப்பிற்கு எதிராக அண்மையில் கல்முனை மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger