டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஓடும் காரில் மாணவி பலாத்காரம்-
டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து, பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும், டெல்லியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் இப்போது மற்றொரு மாணவி ஓடும் காரில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையில் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவியை 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் தெற்கு டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் சாலையோரம் காரை நிறுத்தி, அந்த மாணவியை கீழே தள்ளியிருக்கின்றனர். அப்போது, போலீசில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment