ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: அமெரிக்காவில் பரபரப்பு / உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே அழுத்தத்திற்கு காரணம் -விக்கிரமபாகு கருணாரத்ன


 

Print Friendly
us.obamafamilyஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: அமெரிக்காவில் பரபரப்பு-
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ‘செனட்’ உறுப்பினர் ரோஜர் விக்கர். இவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு ‘ஆந்த்ராக்ஸ்’ விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன.
அதன் பின்னர் அமெரிக்க அதிபர், துணை அதிபர், எம்.பி.-க்கள் ஆகியோருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் வெள்ளை மாளிகையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஓர் இடத்தில் அதிகாரிகள் கடுமையாக சோதனையிடுகின்றனர். அதன் பின்னரே கடிதங்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
சமீபத்தில் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிபயங்கர ‘ரிசின்’ (ஆமணக்கு செடியின் கழிவுகளில் தயாரிப்பது) என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒபாமாவின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் ‘ரிசின்’ ரவைகள் காணப்பட்டதாக அந்த கடிதத்தை சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ரிசின்’ ரவைகள் காற்றில் கலந்து சுவாசப் பைக்குள் சென்றால் அதிபயங்கர நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
செனட்டர் ரோஜர் விக்கருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குள் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், இந்த இரு கடிதங்களையும் அனுப்பியுள்ளது ஒரே நபராகத்தான் இருக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர்.
2 கடிதங்களுமே டென்னசீ மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து 16ம் தேதி அனுப்பப்பட்டுள்ளன. அவை ஒரே மொழியில் எழுதப்பட்டு, ஒரே நபரால் கையொப்பமிடப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கடிதங்களையும் அனுப்பிய நபரை பிடிக்க அமெரிக்க உளவுத் துறை போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே அழுத்தத்திற்கு காரணம் -விக்கிரமபாகு கருணாரத்ன-
இலங்கை உலக நாடுகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் இன்று அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இலங்கைமீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண இன்று கொழும்பில் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ள எந்தப் பரிந்துரையையும் அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது ஆட்சியை கொண்டு நடத்தியது.
ஆனால் அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. அதிலொன்று தான்அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உதவித் தொகையில் 20 வீதக் குறைப்பு. இதேவேளை, ஏனைய உலக நாடுகளும் எமது நாட்டுக்கு எதிராக இவ்வாறு செயற்படுமேயானால் அரசாங்கம் அல்ல நாட்டு மக்களே பாரிய சவல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்பை மக்களே இவ்வாறான சுமைகளை தாங்கினர். ஆனால் தற்போது சிங்கள மக்களும் இச் சுமையை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger