சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள கந்தியார் பாலத்தின் கீழ் விசா இன்றி சுமார் 300 இலங்கையர்கள் தங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் தங்களது உடமைகளைத் தொலைத்து சொந்த நாட்டுக்கு திரும்ப வழியின்றித் தவிக்கும் பட்சத்தில் அவர்கள் கந்தியார் பாலத்தின் கீழ் வந்தால் அவர்களுக்கு விமா டிக்கெட் உட்பட பயண ஆவணங்களை சவுதி அரசு இலவசமாக வழங்கி அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையையை மேற்கொண்டு வருகின்றது.
எனவே விசா நிறைவடைந்த பின்னரும் அங்கு தங்கியிருக்கும் பலர் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசா நிறைவடைந்த பின்னரும் பலகாலமாக அங்கு சட்டவிரோதமாக தங்கிருப்போர் தாம் பிடிபடும் பட்சத்தில் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்புவது சிக்கலானது மற்றும் செலவு மிக்கது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளதுனர்.
இதனால் இப்பாலத்தின் கீழ் அத்தகையோர் தஞ்சமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இலவசமாக சட்டச் சிக்கல் இன்றி தாய் நாட்டுக்கு செல்ல முடியும் என்பதால் பலர் இங்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே உத்தியை பின்பற்றியே இலங்கையர் பலரும் இங்கு வருவதாகவும் தற்போது 300 இலங்கையர்கள் வரை அப்பாலத்தின் கீழ் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment