இலங்கை நாட்டில் யுத்தம் எவ்வாறு தோன்றியது??





மது நாடு 1948-02-04ம் திகதி சுதந்திரம் அடைந்தது மேலும் இச் சுதந்திர தினத்தை ஆண்டான்டு காலம் கொண்டாடபட்டும் வருகின்றது. இது இப்படி இருக்க இச் சுதந்திர தினத்தை பற்றி நாம் சற்று விரிவாக ஆராய வேண்டிய பொறுப்பும் எமக்கிருக்கின்றது.

அந்த வகையில் சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் மக்கள் வாழுகின்ற எமது நாட்டிற்கு எதற்காக: சுதந்திரம் ஒரு தேவையாக இருந்தது????

எமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலயர்களின் ஆட்சி நடைமுறையில் இருந்தது. எனவே இந்த முறைமை மூவின மக்கள் வாழுகின்ற இலங்கை நாட்டிற்கு பொறுத்தமானதாக அமையவில்லை என்பதற்காகவே சுதந்திரத்துக்கான சில நடவடிகைகள் மூவின மக்களாலும் மேற்கொள்ளப்படுகின்றது ஆகவே இது சம்பந்தமான அதிகமான விளகத்தை பெற நீங்கள் விரும்பினால எனது நன்பன் றம்ஸான் மகசுத்தினுடைய முகபுத்தகத்தை

சற்று திரந்து பாருங்கள்.

யுத்தம் தோன்றியமைக்கான காரணம்தான் என்ன?

01 சுதந்திரத்திற்கு முன் 02 சுதந்திரத்திற்கு பின் 
என இரண்டு காலங்களாக பிரித்து ஆராய்வதன் மூலம் இதற்கான காரணங்களை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில்

01 சுதந்திரத்திற்கு முன் நாடு எப்படி இருந்தது???

தேசிய இனம் ஆங்கிலம்
தேசிய மொழி ஆங்கிலம்
அரசியல் அதிகாரம் ஆங்கிலம்
பதவி உயர்வு ஆங்கிலம்
முப்படை அதிகாரம் ஆங்கிலம்
கல்வியில் சிறந்த பெறுபேறு ஆங்கிலம்

எனவே மேற்படி முறைமை மூவின மக்களுக்கு பொருத்தம் இல்லை என்பதற்காகவே சுதந்திரம் எமக்கு ‌‌தேவையாக இருந்தது.

02 சுதந்திரத்திற்கு பின் நாடு எப்படி இருக்க வேண்டும் ஆனால் எப்படி இருக்கின்றது?????ஃ

தேசிய இனம் சிங்களம்
தேசிய மொழி சிங்களம்
அரசியல் அதிகாரம் சிங்களம்
பதவி உயர்வு சிங்களம
முப்படை அதிகாரம் சிங்களம்
கல்வியில் சிறந்த பெறுபேறு சிங்களம்

ஆகவே அன்றைய முறைமை மூவின மக்களுக்கும் பொறுத்தம் இல்லை என்று கூறிய ‌சிங்களவர்கள் இன்று அப்படியே ஆங்கிலயர்களின் கொள்‌கயை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள் இதனைதொடர்து இந்த முறையை தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு பொறுத்தம் இல்லை என்பதற்காக வேண்டியே போராட்டங்கள் ஆரம்பமாகின்றது. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே

போராட்டத்தின் வகைகள்

1 கடிதங்கள் 2 துண்டு பிரசுரங்கள் 3 ஆர்பாட்டங்கள் 4 உன்னாவிரதம் 5 மரியல் போராட்டம் 6 சங்கிலி போராட்டம் போன்ற காரணிகளுக்கமைவாக போராட்டங்கள் ஆரம்பித்தது ஆனால் எதிலும் பயனலிக்கவில்லை தொடர்தும் நசுக்கப்பட்டார்கள

எனவே இச் செயற்பாடுகளுக்கு பின்னரே ஆயுதப்போராட்டதை ஆரம்பித்தார்கள் எனவே இதனை பார்கும் போது இவர்களினுடை போராட்டம் நியாயமானதாக தெரிகின்றது.

இதில் ஒரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும் இப்படி நியாயமான காரணங்களை கொண்ட போராட்டத்திற்கு ஏன் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டது?

நியாயங்களை கோரி ஆயுதப்போராட்தை வளி நடத்திய அமைப்பினரால் எதுவும் அறியாத சிங்கள முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர் எனவே பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளுக்காகவே பயங்கரவாதம் என்று பெயர் சூட்டப்பட்டது .ஆகவே இப் பெயர் சூட்டப்பட்டதும் நியாயமான விடயம் ஆகும்.

மேலும் சிந்திக்க கூடிய மனிதர்களே எமது நாட்டில் சிறுபான்மை நசுக்கப்பட்டவர்களாகவே வாழ்து வருகின்றனர்
என்பதனை வரலாறு எமக்கு தெளிவாக கூறுகின்றது அன்று மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திய தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டால் இன்று மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற தற்போதய அரசாங்கத்தை என்னவாதம் என்று அழைப்பது?


எனவே மறைந்திருந்து உண்மை சொல்லும் கோழைகளாக இருப்பதை விட தலை நிமிர்ந்து சொல்லுங்கள் அதற்காக எங்கள் தலைபோனாலும் பராவாயில்லை.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger