கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே இன்று புதன் காலை நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர். ஆனால் உயிரிழப்பு ஏதுமில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கின்ற சூழலில் இன்றைய குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டு பொருத்தப்பட்டிருந்திருக்கலாம் எனப் போலீசார் கூறுகின்றனர்.
குண்டுவெடித்த பிறகு அந்த இரு சக்கர வாகனம் முற்றிலுமாக சிதைந்திருந்தது.
பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திர அவுரட்கர் எத்தகைய குண்டு என்பது பற்றியோ யார் குண்டு வைத்திருக்கக்கூடும் என்பது பற்றியோ விசாரணையின் பிறகே கூறமுடியும் என்றார்.
நகரின் வேறொரு பகுதியிலும் மதியம் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் ஆனால் பாதிப்பு எதுவுமில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
மல்லேஸ்வரம் பகுதி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Post a Comment