புதுவருடத்தை முன்னிட்டு விடுமுறைக்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் நுவரெலியா போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். எனினும் இப்பயணம் சிலருக்கு இடைநடுவில் துக்கத்தையும் இழப்புக்களையும் ஏற்படுத்திவிடுகின்றது.
இந்தவகையில் விடுமுறைக்காக கொழும்பு குணசிங்கபுர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து தனியார் வேன் ஒன்றில் பல கணவுகளுடன் சென்ற இரு குடும்பங்களினது பயணம் நுவரெலியா சென்றவேளை கடந்த திங்கள் கிழமை இரவு 11.00 மணியளவில் லிந்துளை எனும் இடத்துடன் சோகத்துடன் முடிவடைந்து விட்டது.
நுவரெலியாவை நோக்கிச் சென்ற வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தா அல்லது சாரதியின் தூக்கமறதியா என்பது கண்டுகொள்ளமுடியாத நிலையில் சுமார் 100 அடிக்கு மேற்பட்ட மலைப்பாங்கான பகுதியில் இருந்து வேன் பள்ளத்தை நோக்கி திடீரென வீழ்ந்து சுக்கு நூறாகியது.
வேன் வீழ்ந்த சத்தத்தைக்கேட்ட அயலவர்கள் விபத்திற்குள்ளானவர்களை காப்பாற்றும் விடயத்தில் ஈடுபட்டுள்ளனர் எனினும் சாரதி உட்பட மூவர் ஸ்தளத்திலேயே மரணமானர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணமானவர்களில் வேன் சாரதியும் குணசிங்கபுர டயஸ் பிளேஸ் தொடர் மாடி வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களான 42 வயதுடைய நளீம் சஞ்ஜீவ என்பவரும் 37 வயதுடைய வேலாயுதம் அன்ரனி (லால்) ஆகியோர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நளீம் சஞ்ஜீவனின் மணைவி நிமேஷா, மகன்களான அபிமந்த (13), அதீஷ (8) மற்றும் ஒருவயது மகள் அமனி ஆகியோரும் மரணமான வேலாயுதம் அன்ரனியுடைய மகள் கிஷாந்தினி (13), மகன் மினோவரன் (11) ஆகியோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது காயமடைந்த நளீம் சஞ்ஜீவனின் மணைவி நிமேஷா அவரது மகள் ஒருவயது மகள் அமனி ஆகியோர் மேலதிகச் சிகிச்சைக்காக கண்டி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலாயுதம் அன்ரனியுடைய மகன் மினோவரன தொடர்ந்தும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை ஏனையோர் சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளதுடன். மரணமானவர்களின் உடல்கள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
Post a Comment