அளுத்கம விவகாரத்துக்குப் பிறகு அரசுடன் இணைந்திருப்பதில் தான் வெட்கப்படுவதாக ரவூப் ஹக்கீம் சொல்லித் திரிகிறார்.அப்படி அவருக்கு வெட்கமாக இருப்பதென்றால் அவர் வெளியேறட்டும்.எதற்காக அரசுடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? என ஜாதிக ஹெல உறுமயின் பொதுச் செயலாளரும்,அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்து ஒன்றும் ஆகப் போவதில்லை.மட்டுமின்றி ரணில் விக்கிரமசிங்கவோ முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்து ஜனாதிபதியாகும் கனவில் இருக்கிறார்.அவர் ஜனாதிபதியாவதற்கு எப்பொதும் நாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment