அளுத்கம ,பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பொது பல சேனாவை முற்றாகத் தடை செய்யுமாறு கோரி காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் ஜேபியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பொது பல சேனாவை முற்றாகத் தடை செய்யுங்கள், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், முஸ்லிம்கள் மீதான ஒடுக்கு முறை வேண்டாம், குழப்பவாதி ஞானசார தேரரை கைது செய், முஸ்லிம் அரசியல் தலைமைகளே எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், சிறுபான்னை என்கின்ற இன பேதம் வேண்டாம், ஊடகங்களே இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டுங்கள் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment