அமெரிக்காவில் உலக சாதனை படைக்க முயற்சித்த ஒருவர் ஒரே ஒரு வினாடி தாமதமானதால் படுகாயம் அடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள Guerlain Chicherit என்பவர் 101 மீட்டர் நீளத்தை கார் ஜம்ப் மூலம் உலக சாதனை செய்ய விரும்பினார். ரிகர்சல் செய்யும்போது மிகச்சரியாக காரில் பறந்த இவர், உலக சாதனையாளர்கள் முன்னிலையில் கார் ஜம்ப் செய்யும்போது, ஒரே ஒரு வினாடி தாமதமானதால் கார் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த Guerlain Chicherit அவர்களின் மனைவி கதறிய காட்சி பார்ப்பவர்களை பதற வைப்பதாய் உள்ளது.
Guerlain Chicherit சென்ற கார் கார் பலமுறை உருண்டு உருக்குலைந்து போனபோதிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு பெரிய அளவில் காயம் இல்லை.
இருப்பினும் தனக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும், மீண்டும் உடல்நலம் தேறியவுடன் இந்த உலக சாதனையை செய்வேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் அவருடைய நண்பர் ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் நீளமான வீடியோவாக இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கொள்ள செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இணையதள வாசகர்களுக்காக இந்தவீடியோவை இங்கு பதிவு செய்திருக்கின்றோம்.
Post a Comment