நாட்டில் வாழும் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 50 ஆயிரம் ரூபாவையும் தாண்டியுள்ளதுடன் அரசு இந்த பொருளாதார பிரச்சினையை மூடி மறைப்பதற்காக நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டி வருகிறது என்று ஜே.வி.பி கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 50 ஆயிரத்து 260 ரூபா வரை உயர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில், அரசு சம்பளத்தை அதிகரித்து நாட்டில் சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்குப் பதிலாக நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி விட்டு பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்கிறது.
2005 ஆம் ஆண்டு ராஜபக் அரசு இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது, நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 25 ஆயிரத்து 344 ரூபாவாக இருந்தது.
தற்போது இந்தச் செலவு 50 ஆயிரம் ரூபாவையும் தாண்டி யுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்க ளின் சம்பளம் 5 சதத்தால் கூட அதிகரிக்கப்படவில்லை என்றார்.

Post a Comment