ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலைதீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
மாலைதீவின் உப ஜனாதிபதி கலாநிதி மொஹம்மத் ஜமீல் அஹமத்துடன் நேற்று குரும்பா தீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான செயற்பாடுகளுக்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
மேலும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீஷெல்ஸ் இன் விசேட அழைப்பை ஏற்று இன்று ஜனாதிபதி அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது சீஷெல்ஸ் இல் புதிதாக திறக்கப்படவுள்ள இலங்கைத் தூதரக நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

Post a Comment