இலங்கைக்கு நாளை மறுதினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் தனது விஜயத்தை ஒத்திப்போட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு வொஷிங்டனில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்பு காரணமாகவே இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக அந்நாட்டு உள்ளூர் சேவைகள் மற்றும் பொது உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையில் அவர் தங்கியிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வமைச்சு தெரிவித்தது.
பாகிஸ்தான் இராணுவ தளபதி எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்ததாகவும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்தது
Post a Comment