ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தால் ரூபாய் மதிப்பும், பங்குகள் விலையும் வெகுவாக குறைந்து வருகிறது. அந்நாட்டில் தீவிரவாதிகளால் முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கடந்த சில நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
தொடர்ந்து அந்நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு குழப்பம் உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதித்து வருகிறது. இந்தியாவும் இந்த குழப்பத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பண வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால் மத்திய அரசுக்கு நிதியிழப்பும், பொருளாதார சிக்கல் உருவாகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக பங்கு வர்த்தகத்தில் தொடர் சரிவு காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை 348 புள்ளிகள் குறைந்து 25228 என்ற நிலையிலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 பைசா குறைந்து 59.77 ஆக உள்ளது.
கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க டாலரை தரவேண்டும் என்ற சூழலில் ரூபாய் மதிப்பு குறைவது நமக்கு பெருத்த நஷ்டத்தை தரும் என எண்ணெய் கம்பெனிகள் தெரிவித்துள்ளன. இதனால் அடுத்த வாரம் பெட்ரோல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாகும் வாய்ப்புள்ளது.
Post a Comment