கவுணாவத்தை ஆலயத்தில் நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடை விதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பிரிவு 4 இன் கீழ் பிரதேச சபையிடம் முன் அனுமதி பெற்று வர்த்தமானி மூலம் பொது அறிவித்தல் விடுத்தே கடா வெட்ட முடியும் எனவும் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கவுணாவைத்தை மிருகபலி எதிர்வரும் சனிக்கிழமை (14) நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment