பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரரின் தலைமைத்துவம் குறித்து அவ்வமைப்பினுள் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சிங்கள தேசிய ஊடகமொன்று அவருடன் மேற்கொண்ட நேர்காணலில் தமது இயக்க செயற்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்களை தேரர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அவருடனான நீண்ட நேர்காணலில் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.
கேள்வி – பொதுபல சேனாவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் உள்ள தொடர்பு ?
பதில் – நான் நினைக்கும் அளவுக்கு, அவ்வாறு சந்தித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தியதில்லை.
கேள்வி – பொதுபல சேனாவின் செயற்பாடுகளுக்கு ஐ.நா.வின் பணம் கிடைக்கிறதா?
பதில் – நான் அறிந்த வரையில், இவ்வாறு எவரும் பணம் தந்ததில்லை.
கேள்வி – நீங்கள் அறியாமல் ? (பணம் கொடுத்திருப்பார்களா?)
பதில் – அவ்வாறு யாரும் எடுத்திருக்கிறார்களா என்பது குறித்து எனக்கென்றால் தெரியாது.
கேள்வி – அப்படியென்றால், ஐ.நா. வின் வாகனத்தை பொதுபல சேனாவினால் பயன்படுத்துவது குறித்து,?
பதில் – இல்லை, அப்படி இல்லை.
கேள்வி – நீங்கள் இப்படிக் கூறியபோதிலும், உங்களது அமைப்பின் முக்கிய உறுப்பினர் டிலன்த விதானகே அவர்கள் பயணங்கள் செல்வதெல்லாம் ஐ.நா.வின் சின்னம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் அல்லவா?
பதில் – அப்படியானால், எனக்குத் தெரியாமல் களவில்,
கேள்வி – இப்படிச் சொல்லி, ஒர் அமைப்பின் தலைவராக இருக்கும் நீங்கள் பொறுப்பில்லாமல் இருக்கலாமா?
பதில் – தொழில் செய்யும் அமைச்சினால் வழங்கப்பட்ட வாகனம் என்று தான் என்னிடம் அவர் தெரிவித்திருந்தார்.
கேள்வி – பொதுபல சேனாவினால் வில்பத்து காட்டுக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றதும் ஐ.நா. விற்குரிய ஒரு பஸ்ஸில் ஆகும், இது குறித்து,?
பதில் – எனக்கென்றால் தெரியாது. நான் அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவும் இல்லை.
கேள்வி – ஊடகவியலாளர்களை அங்கு அழைத்துச் செல்வது குறித்து நீங்கள் அறிந்திருந்தீர்களா?
பதில் – இல்லை, நான் அந்த நாட்களில் எனது தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கியிருந்தேன். எனக்கு அதுபற்றிக் கூறவே இல்லை.
கேள்வி – நீங்கள் அப்போது அமைப்பிலிருந்து விலகியிருக்க வில்லைதானே?
பதில் – உத்தியோகபுர்வமாக விலகியிருக்க வில்லை. பெயரளவில் தலைவராக இருந்தேன்.
கேள்வி – எப்போது நீங்கள் இவ்வமைப்பிலிருந்து உத்தியோகபுர்வமாக விலகுவீர்கள்?
பதில் – தற்பொழுது பிரச்சினையொன்று எழுந்துள்ளது. இது தொடர்பில் குற்றவியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. சிலபோது என்னையும் கைது செய்யுமோ தெரியாது. இவை முடியும் வரையில் இவ்வமைப்பின் தலைமையில் இருக்க வேண்டும் அல்லவா !
கேள்வி – தற்பொழுதும் பொதுபல சேனாவின் தலைவர் நீங்கள் தானே?
பதில் – பெயரவில்
கேள்வி – அப்படியென்றால், இவ்வமைப்பினால் முன்னெடுக்கப்படும் சகல செயற்பாடுகளுக்கும் நீங்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும் அல்லவா?
பதில் – ஆம், அதனால் தானே நான் இன்னும் பதவி விலகாமல் இருக்கின்றேன்.
கேள்வி – அளுத்கம – பேருவளை சம்பவத்துக்கும் நீங்கள் பொறுப்புக் கூறுவீர்களா?
பதில் – விசாரணையின் முடிவுகளின் படி முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி – உண்மையில் இந்த இடத்தில் பொதுபல சேனா தவறுவிட்டதா?
பதில் – தனது பாட்டில் இருக்காமல் அந்த இடத்தில் தலையிட்டதனால் அதற்குரிய பொறுப்பைச் சுமக்க வேண்டியுள்ளோம். இதனைத் தான் கேட்டுத் திண்ணுவது என்று சொல்வது. இருப்பினும், இது சூழ்ச்சியொன்று. இதனை ஏற்பாடு செய்திருந்தது. பொதுபல சேனா அல்ல.
கேள்வி – ஞானசார தேரரின் கடந்த கால வாழ்க்கை குறித்து பல்வேறு குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில ஊடகங்களில் அது பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது. நீங்கள் இதனை அறிந்திருக்க வில்லையா?
பதில் – நான் வெஹெரஹேன விகாரையிலிருந்துதான் எனது துறவு வாழ்வை ஆரம்பித்தேன். 1972 இல் இலங்கையிலிருந்து சென்றேன். மலேசியாவில் 14 வருடங்கள் இருந்து விட்டு திரும்பவும் 1989 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். சிங்கப்புரில் இரு வருடங்கள் இருந்தேன். அமெரிக்காவில் நான்கு வருடங்கள் கழித்தேன். இது வல்லாமல் தேரர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இலங்கையில் வந்து எனது புத்தக வேலையில் ஈடுபட்டேன் அவ்வளவு தான். (மு)
நன்றி – ஞாயிறு மவ்பிம
Post a Comment