அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா! பாதுகாப்பு அமைச்சு பிரசாரம்


அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இப்பிரசாரத்தை முன்னின்று நடத்துகின்றார்.

அவரது ஊடக நண்பரான சீ.ஏ. சந்திரபிரேம என்பவரே இது தொடர்பான ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்.

இவர் கோத்தபாயவின் யுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரின் வெற்றி முழுக்க கோத்தபாயவின் பங்களிப்பில் வந்தது என்பதாக நூலொன்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்திரபிரேமவின் கட்டுரையொன்றை பிரசுரித்துள்ள ஆசியன் மிரர் இணையத்தளம், அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் மீது இயல்பாகவே வஞ்சம் உள்ளது.

பொதுபல சேனாவைப் பயன்படுத்தி அவர்கள் இலங்கை முஸ்லிம்களிடம் அதனைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவ்வாறான நோக்கினை முன்வைத்தே பொதுபல சேனா முக்கியஸ்தர்களுக்கு அமெரிக்காவுக்கான சுற்றுப் பயண ஏற்பாடும், வீசாவும் வழங்கப்பட்டிருந்தாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை போன்று சிங்கள இணையத்தளங்களிலும் சில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை அனைத்திலும் அளுத்கம இனவாதத் தாக்குதலின் பின்னணியில் பொதுபல சேனா இல்லை என்பதாகவே நிரூபிக்க முயன்றுள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger