அடிப்படைவாதிகளை கைது செய்தால், மேலும் கலவரங்கள் ஏற்படக் கூடும். இதனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை ஜூம்மா பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குவதாகவும் எதிர்காலத்தில் அளுத்கம போன்ற சம்பவங்கள் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

Post a Comment