அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த என்னையும் மொஹமட் ராஜித்த என அழைக்க ஆரம்பித்துள்ளனர். இதனையிட்டு நான் கவலைப்படமாட்டேன் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று அளுத்கமயில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அளுத்கம, தர்காநகர் மற்றும் பேருவளைப் பிரதேசங்களில் கடும்போக்குவாதிகள் ஏற்படுத்தியுள்ள அழிவுகளினால் நஷ்டப்படுவது வேறு யாருமல்ல, அரசாங்கமே ஆகும். அவர்கள் அடித்தது அங்குள்ள மக்களுக்கல்ல. அரசாங்கத்திற்காகும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுப் பயணமொன்றை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நான் இங்கு இருந்திருந்தால் அப்பிரதேசத்தில் ஒரு துளி இரத்தம் கூட சிந்த விட, விட்டிருக்க மாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment