யாழில் விஜயின் – ஜில்லாவும் அஜித்தின் – வீரமும்! தடம் புரளும் இளைஞர் பட்டாளம்

மாலை ஆறுமணி ஆகிவிட்டால் “ சின்னமருமகள் தொடக்கம் சொல்லதெல்லாம் உண்மை வரை பெண்களும், தலையா தளபதியா என்று சந்திகளில் இன்று திரைச் சங்கதிகள் பேசும் நிலைதான்.
ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இந்த இரண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது இதன் தாக்கம் இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது.
“ தேத்தண்ணியைப் போடப்பா” என்று உரத்த குரலில் பேசிக்கொண்டு வேலையால் வருகின்ற கணவனிடம் “ சின்ன மருமகள் முடியட்டும் பொறுங்கோ” என்று சொல்லும் சீரியல் மோகம் இன்று யாழப்பாணப் பெண்களிடம் தலைக்கேறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறான நிலமைகள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக அமைகின்றது. அண்மையில் யாழில் உள்ள எனது நண்பனின் வீட்டுக்குச் சென்ற போது சின்னப்பிள்ளைகளால் கலகலக்கும் அந்த வீடு அமைதியாக இருப்பது என்னால் உணர முடிந்தது இதன் காரணத்தை ஆராய்ந்த போது சீரியல் தொடங்கிவிட்டால் பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு படிக்குமாறு வீட்டில் உள்ளவர்கள் சீரியல் பார்ப்பதை அவதானிக்க கூடியவாறு இருந்து.
யாழில் அண்மைக்காலமாக சினிமா நடிகர்களுக்காக மன்றம் அமைத்து கொடி கட்டி கோசம் போடும் புதிய கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தென்னிந்தியாவைப்போன்ற நிலை இங்கு உருவாகிவருவது எம் இளைஞர்களின் வரமா அல்லது சாபமா என்று எண்ணத்தோன்றுகின்றது. தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு நற்பணி மன்றம் வைப்பது, கொடிபிடிப்பது, பால் ஊற்றுவது, கோயில் கட்டுவது என்று தொடங்கி ஏன் அண்மையில் தீக்குழிப்பது வரை அரங்கேறியிருப்பது இது எல்லாம் தென்னிந்தியாவில் ஏதோ ஒரு அரசியல் நோக்கித்திற்காக மேற்கொள்ளப்படுபவவை ஆனால் இங்கு அதுவும் யாழில் இவ்வாறான செயற்பாடுகள் ஏன் எதற்காக இதனால் எமக்கு என்ன நன்மை என்று நாங்கள் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
யாழில் தற்போது விஜய் நடித்த ஜில்லாவும் அஜித் நடித்த வீரமும் தியைரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் களை கட்டிக்கொண்டிருக்கிறது படம் தொடங்க சிறிய நேரம் ஆகிவிட்டாலோ அல்லது மின்சாரத்தடை ஏற்பட்டாலோ திரையரங்கு ரசிகர்களில் கூச்சல் கும்மாளத்தால் அதிரத்தொடங்கும் திரைப்படம் பார்ப்பதற்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரும் காதுகளை பொத்தக் கூடிய வாறு வார்த்தைப் பிரயோகங்கள் அலைவீசும் இந்த நேரத்தில் இவர்கள் ரசிகர்களா? வெறியர்களா? என்ற எண்ணம் தோண்றும்.
இம்முறை யாழில் ஒரு வித்தியாசமான ஒரு அணுகுமுறையை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் காணக் கூடியாதாக இருந்து தங்கள் சொந்தச் செலவில் திரையரங்குகளில் பெனர்கள் அடித்து அதில் தங்கள் படங்கையும் இனைத்து ரசிகர்கள் மன்றம் என்று போட்டுள்ளதுடன் இதில் பஞ்சு டயலக் வேறு.
 தங்கள் பிழைப்புக்காக நடிப்பவர்களுக்காக நாங்கள் திரையரங்கில் எழுந்து நின்று தலைவா, ஜீ, தல, என்றெல்லாம் கூச்சலிடும் நாங்கள் ஏன் இதனைச் செய்கின்றோம் என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? ஆண்மையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ள ஆவா குறுப்பென்ற அணி கூட தென்னிந்தியா சினிமாப் பாணியில் தான் தனது கைங்கரியங்களை யாழில் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றார்கள்.
நடிகர்களுக்காக குரல்கொடுப்பது கோயில் கட்டுவது கொடிபிடிப்பது,பால் ஊற்றுவது என்பதெல்லாம் தென்னிந்தியாவில் சாத்தியப்பாடானது. ஆனால் அது எமக்கும் எங்கள் மண்ணின் பெருமைக்கும் ஏற்றதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.
அன்பான இளைய சமுதாயமே நாட்டில் நடைபெற்ற 30 வருட யுத்தத்தால் ஏதோ ஒரு வழியில் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகப்பாதிப்பு எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வன்னிமைந்தன்
Jaffna_VjiJaffna_Vji1Jaffna_Vji2Jaffna_Vji3
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger