அநுராத்தில் ஐவரையும் கொன்றது ஏன்?: சந்தேகநபர் வாக்குமூலம் - வட்டியால் வெட்டப்பட்ட மனித உயிர்கள்.


அநுராதபுரம், ஹல்மில்லகுளம எனுமிடத்தில் இடம்பெற்ற ஐவர் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
ஐந்து கொலைகளின் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரான ஜகத் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன்.
அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்கவும் சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது.
கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது வாக்குமூலத்தில்,
தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான்.
அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் அஞ்சியதையடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்
”முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் நான் படுகொலை செய்தேன்” என  அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை சமூக தளத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களின் பிரதிபலிப்புகளில் ஒன்றே மேற்குறித்த ஐவர் படுகொலை! புனிதமாய் மதிக்கப்பட வேண்டிய மனித உயிர்கள் கேவலம் ஒரு முச்சக்கர வண்டிக்கான தவனைக் கொடுப்பனவுக்காக ஈவு இரக்கமின்றி பறிக்கப்பட்டுள்ளமை இந்நாடு எங்கு நோக்கி பயணிக்கிறது என்பதை சிந்திக்கத்தூண்டுகிறது.
உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். ஆதலால் மாடறுப்பை தடுக்க வேண்டும் என்று கோஷமிடும் காவிக் காடையர்கள் மனித உயிர்களையே காவு கொள்ள காரணமாய் இருக்கும் வட்டியை தளமாகக் கொண்ட வியாபார முறைமைகளை ஏன் கண்டிப்பதில்லை? இதற்காக ஏன் பொதுக் கூட்டம் நடாத்துவதில்லை?
இலங்கைக்குக் தேவை இஸ்லாம் ஒன்றே!
இந்நாடு அமைதிப் புங்காவாக மாறி, பஞ்சமா பாதகங்களும் ஒழிய வேண்டுமானால் அதற்கு அவசரமாய் தேவைப்படுவது “மஹிந்த சிந்தனை“ அல்ல! அல்லாஹ்வின் வாழ்க்கை நெறியான இயற்கை மார்க்கம் இஸ்லாம் ஒன்றே! இதை உணரும் காலம் வெகு தொலைவிலில்லை!

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger