பாலியல் ரீதியாக பலவீனமானவர்கள் பயன்படுத்தும் பாலியல் மருந்துகளை பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது, பாலுறவு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நபர்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை பாடசாலை மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி வருவதாக அழகுசாதன மற்றும் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இது ஓர் ஆபத்தான நிலைமை என குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலியல் ரீதியாக பலவீனமானவர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்ற காரணத்தினால், மருத்துவ ஆலோசனையின்றி இதனைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாகவும் சட்டவிரோதமான முறையிலும் இந்தப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்களை தடை செய்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், மருந்தகங்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment