Oct. 13 Comments Off
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமையகம் நேற்று 12.10.2013 சனிக்கிழமை அன்று ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமின் ஆரம்ப நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ஹுனைஸ் பாருக் அவர்கள் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நவ்பர், ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் MP மற்றும் கொழும்பு, மாளிகாவத்தை போலிஸ் நிலையை பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் MP மற்றும் கொழும்பு, மாளிகாவத்தை போலிஸ் நிலையை பொறுப்பதிகாரி ஆகியோர் இரத்தம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.












Post a Comment