கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் தாக்குதல்(முழுமையான வீடியோ) – களத்தில் SLTJ

Aug. 11 Comments Off
கொழும்பு, க்ரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த காடையர்களுடன் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.
போலிஸ் கைகட்டிப் பார்த்தது.

பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தாக்குதல் விபரங்கள்.

பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கேட் கலற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் உடைக்க முயற்சி.

பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் காவிக் காடையர்கள் அந்த இடத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
SLTJ களமிறங்கியது.

பள்ளி உடைக்கப்படும் தகவல் ஜமாத்திற்குக் கிடைத்தவுடன் ஜமாத்தின் நிர்வாகம் உடனடியாக மோலவத்தை பள்ளியை நோக்கி விரைந்தார்கள்.
ஜமாத்தின் தலைவர் ஆர்.எம். ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் உட்பட ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக பள்ளிவாயல் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்தார்கள்.
அங்கு கூடியிருந்த காவிக் காடையர்களை போலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற நமது நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டும் அவர்களை அப்புரப்படுத்துமாறு போலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள் இருப்பினும் போலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயலவில்லை.
முஸ்லிம்களை வெளியேற்ற முனைந்தது போலிஸ்.

பள்ளியை உடைக்க வந்த காவிக் காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்கள்.
பல தடவை நமது நிர்வாகிகளுடன் கலைந்து செல்லுமாறு போலிசார் பேச்சுவார்தை நடத்தினார்கள்.
இருப்பினும் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.
பல கட்ட பேச்சுவார்தைகள்.

முஸ்லிம்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்பதற்காக போலிசின் பல உயர் அதிகாரிகள் நமது நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்தையை நடத்தினார்கள். நாம் அவர்களிடம் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் செல்லமாட்டோம் என்று உறுதியாக அறிவித்துவிட்டோம்.
இறுதியாக எட்டப்பட்ட முடிவு.

இறுதியில் போலிஸ் உயரதிகாரிகள் நமது ஜமாத் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் அவர்களை உடனடியாக கலைப்பதாகக் கூறி கலைத்து அனுப்பினார்கள்.
பின்னர் பள்ளியை உடைத்த அனைவரையும் ஒரு நாளைக்குள் கைது செய்வதாக வாக்குறுதியளித்தார்கள்.
அது போல் தொடர்ந்தும் பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
நாளை முதல் தொழுகை நடத்துவதற்காக அனுமதியும் வழங்கப்படும் என்பதும் பாதுகாப்புத் தரப்பினரால் சொல்லப்பட்டது.
இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அங்கிருந்த சகோதரர்களை அழைத்துக் கொண்டு நமது ஜமாத்தினர் கிரேன்பாஸ் சந்திக்கு வந்தார்கள்.
சந்தியில் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பு.

கிரேன்பாஸ் சந்திக்கு நாம் வரும் போது அங்கு ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் திறண்டிருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் பள்ளிவாயல் அமைந்திருந்த இடத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளை ஜமாத்தின் செயலாளர் சகோ. ராசிக் அவர்களும் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் தெளிவாக எடுத்து சொல்லி அனைவரையும் கலைந்து செல்லுமாறும் இன்ஷா அல்லாஹ் நாளை முதல் பள்ளிவாயல் தொடர்ந்து இயங்கும் என்றும் இயங்கவிடாமல் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஜமாத் களமிறங்கி செயல்படும் என்பதையும் அறிவித்தார்கள்.
மட்டுமன்றி இன்ஷா அல்லாஹ் இலங்கையில் பள்ளிவாயல்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும் படி கோரிக்கை வைக்கும் மாபெரும் மாநாடு ஒன்றை கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் என்பதையும் தெளிவாக தெரிவித்தார்கள்.
சட்ட நடவடிக்கையில் ஜமாத் இறங்குகின்றது.

இன்ஷா அல்லாஹ் கிரேன்பாஸ் மோலவத்தை பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளில் ஜமாத் இறங்கியுள்ளது. சட்ட ரீதியாக பள்ளியை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாடு.

இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தவிருக்கும் பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாட்டின் திகதி விரைவில் அறிவிக்கப்படும். திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் குடும்பத்துடன் இறைவனின் ஆலயங்களை பாதுகாக்கும் உன்னத பணிக்காக திறன்டு வாருங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

மோலவத்தை பள்ளி முழு வீடியோ

மோலவத்தை பள்ளி தாக்குதல் முழு வீடியோ




1
2345678911223344556677
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger