– அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி) -
நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு
வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும்
வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது.
பிரைவிடயத்தில் அதிகமான வாத
பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம்
யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.
இதில் ஜமிய்யதுள் உலமா சபையின்
நிலைப்பாடு சரியா பிழையா என்பதை பொதுமக்கள் மனசாட்சி உறுதிப்படுத்தி இருந்தாலும்
ஆய்வாளர்களுக்கு என்ற சில அடிப்படைகள் மூலம் ஜம்மிய்யதுள் உலமாவின் பிறை ஆய்வு
சபையின் உறுப்பினர் சகோ ஆகில் அஹ்மத் அவர்கள்
முன்வைத்த பிறை பற்றிய கட்டுரை சிலரை யோசிக்க வைத்தது என்பது உண்மையே.
இந்த அடிப்படையில் 07-08-2013
புதன்கிழமை அன்று மாலை பிறை வெற்றுக்கன்னுக்கு தென்பட
வாய்ப்பு இல்லை என்று சகோ ஆகில் அவர்கள் கூறிய எமது ஆய்வுக்கு உடபடுத்திய போது
அவர் வாதப்படியே பிறை தென்பட வாய்ப்பு உள்ளதாகவே வருகிறது.
சகோதரர்
ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் ஒன்று: “இதே
நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின்
பிரகாசத்தின் 0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன்
அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத்
தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானது தொடுவானத்திலிருந்து 02°:25′:00″
(2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.
இத்தினத்தில்
சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப்
பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின்
மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது
சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன்
பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.
சூரியன்
அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு
நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது
வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு
இல்லை. ஏனெனில் “
எமது
பதில்: நீங்கள் கூறிய சந்திர சூரிய அஸ்தமன நேர அட்டவணைகளில் எமக்கு மாற்று கருத்து
இல்லை ஆனால் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரனின் பிரகாசம் எந்த அளவு இருந்ததோ
அதே அளவுதான் சூரியன் மறைந்து 10 நிமிடத்திற்கு பின்னாலும் பிறையில்
இருக்கும் என்று நீங்கள் கணிப்பது பிழையாகும்.
சூரியன் மறைந்து ஏழு நிமிடத்தில்
பிறையை வெற்றுகன்னால் பார்க்க முடியும் என்பது உருதிப்படுத்தபட்ட ஆய்வாகும்.எனவே
சூரியன் மறைந்த உடன் பிறையின் பிரகாசம் இருந்ததைவிட 7 நிமிடத்தின்
பின்பு பிறையின் பிரகாசம் வித்தியாசமாகவே இருக்கும் என்பதை நான் சொல்லித்தான்
நீங்கள் அறிய வேண்டும் என்று இல்லை.
சகோ ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம்
இரண்டு: “சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால்
ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 –
0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில்
வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு
பிரகாசமான சந்திர விம்பம் தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன்
மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.”
எமது
பதில்:இந்த உங்களின் வாதம் சந்திரன்(பிறை) அதே இடத்தில உறுதியாக நிலைகொள்ளுமாக
இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உங்களுக்கும் எனக்கும் உலகத்துக்கும்
தெரிந்த விடயம் யாதெனில் சந்திரன் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு பாகை
தூரம் சூரியனில் இருந்து விழகி செல்கிறது. இந்த சூரியனுக்கும் சந்திரனுகுமான இந்த
அடிப்படையிலான இடைவெளியை ஆய்வு செய்தால் சூரியன் மறைந்து 12 நிமிடத்தில்
மூன்று பாகை தூரம் பிறை விழகி செல்கிறது.இந்த அடிப்படையில் நோக்கும்போது சூரிய
பிரகாசம் சந்திர பிராகாசத்தை மங்க செய்யபோவதில்லை.
அதே நேரம் சூரியனும் பிறையும் அஸ்தமிக்கும்
நேரத்தில் கருத்துவேறுபாடு கொள்ளாவிட்டாலும் சூரியன் மறைந்ததின் பின் சந்திரனின்
பிண்ணனி திரை யில் உள்ள வெளிச்சம் இவ்வளவுதான் இருக்கும் என்று ஏலவே கணிக்கப்பட்ட
கணிப்புகள் மாறும் தன்மைகொண்ட உறுதியாக சொல்ல முடியாத கணிப்புகளாகும்.
இந்த விடயத்தை இன்னும் உறுதியாக சொல்ல
வேண்டும் என்றால் பிறை கண்டவர்கள்கூட வானம் மிகவும் பிரகாசமாக இல்லாமலே இருந்ததாக
கூறுகின்றனர்.அதாவது பிறை தென்பட வாய்ப்பு இல்லாத காரணிகளான பிறையின் முண்ணனி
திரையான மேக மூட்டமோ சந்திரனின் பிண்ணனி திரையான அதிகபட்ச
பிரகாசமா இருக்கவில்லை என்பதுவே நேரடி சாட்சிகளின் தகவல்கள் உருதிபப்டுதுகின்றன.
எனவே சூரிய அஸ்தமனத்தின் போது
சூரியனுக்கும் சந்திரனுகுமான பிரகாசம் வேறு சூரியன் மறைந்த சில நிமிடங்களில் அந்த
இரண்டுக்குமான பிரகாசம் வேறு என்பதை தாங்கள் அறியாமல் இல்லை.சூரியன் மறைந்ததில்
இருந்து ஒவ்வொரு நிமிடமும் சூரியனின் பிரகாசம் சந்திர பிண்ணனி திரையில் மங்கி
கொண்டே செல்லும் அதேவேளை பிறையின் பிரகாசம் கூடிக்கொண்டே போகும் என்பது
உறுதியாகும்.
எனவே பட்டப்பகலில் மின்குமிழ்
வெளிச்சம்போல சூரியனின் வெளிச்சம் பிறையை மறைத்தது என்று சகோதரர் ஆகில் அஹ்மத்
அவர்கள் சொன்ன உதாரணம் பிறைவிடயத்தில் முற்றிலும்
தவறானது.
பிறை பார்த்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தல்
பிறையை
மறுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே கேள்வி கேட்டு இருக்கிறார்கள் என்பதை அவர்களை
கேட்ட கேள்விகள் மூலம் விளங்க முடிகிறது.
கிண்ணியாவில்
குறித்த தினத்தில் தொலைக்காட்டி கருவிகள் மூலம் கூட பிறை தென்பாடாது என்ற
கருத்தில் இருக்கும் ஜமிய்யதுள் உலமா பிறை குழு நோக்கத்தில் என்ன முறையான
கேள்விகளை சாட்சிகளிடம் கேட்டிருக்கும் என்பதை தெளிவு படுத்தாமலே அறிய முடியும்.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்கின்றவர்களை
எதில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமோ அதில் மாத்திரமே குறுக்கு விசாரணை செய்ய
வேண்டும். நபி ஸல் அவர்கள் காலத்தில் காட்டரபி ஒருவர் பிறை கணடதாக சாட்சி
சொன்னபோது நபி ஸல் அவர்கள் ஒரே ஒரு குறுக்கு விசாரணையே செய்கிறார்கள்.
“ நீ
அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுகொல்கிறாயா? என்ற
கேள்வியை மட்டுமே நபி ஸல் அவர்கள் கேட்கின்றார்கள் ஆம் என்று அந்த காட்டரபி
கூறியதும் பிடித்த நோன்பை விட்டுவிட்டு பெருநாளை அறிவிக்கின்றார்கள்.
இதில் நமக்கு அதிகாமான படிப்பினைகள்
உள்ளன.குறுக்கு விசாரணை என்பது தேவையே இல்லை என்று நாம் கருதவில்லை ஆனால் நபி ஸல்
அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் குறுக்கு விசாரணை இருக்க வேண்டும் என்பதுவே எமது
கேள்வி.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்பவரை
எவ்வளவு நேரம் பிறை பார்த்தீர்கள் என்று கேட்க முடியாது காரணம் பிறை என்பது
எவ்வளவு நேரம் தென்பட வாய்ப்பு இருந்தாலும் அவர் கண்ட சில நேரத்தில்
மேக மூட்டம் காரணமாக அந்த நபருக்கு தென்பாடாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.எனவே இந்த
அடிப்படையில் பிறை மறையும் நேரம் வரை அவர் பார்த்திருக்க வேண்டும் என்று சொல்வது
பிழையே.
ஆய்வா
ஆதங்கமா?
பிறை தங்குவதற்கான நேரம்
கருத்துவேருபாட்டுக்கு உரியது.அதிலும் சகோ ஆகில் சொன்ன 14 நிமிடத்தில்
அதிகமான அறிஞர்கள் முரண்படுகின்றனர்.
8(மணி) வயதை
அடைந்த பிறைகூட சூரியன் மறைந்து 16 நிமிடங்கள் தங்கி
இருக்கவே வாய்ப்பு உள்ளதாக அறிவியல் கூறுகிறது.
ஆனால்
இலங்கையில் கிண்ணியாவில் பிறை கண்ட போது அந்த பிறையின் வயது கிட்டத்தட்ட 16
மணித்தியாளங்கள் ஆகும்.16 மணித்தியால
பிறை 30 நிமிடத்துக்கும் அதிகமான நேரம் தரித்து நிற்பதற்கான
வாய்ப்பை விஞ்சானிகள் கூறுகின்றனர்.
இருந்தாலும் பிறை மறையும் நேரம் சூரிய
அஸ்தமனத்தில் இருந்து 14 நிமிடங்கள் என்பதை உறுதியாக கூறி சகோ ஆக்கில் சொல்வதுபோல்
கணித்தாலும் பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்பதை மேலே நாம் கூறிய ஆய்வின்
அடிப்படையில் கூற முடியும்.
எதில்
கருத்துவேறு பாடு இல்லையோ அதை மறுத்துவிட்டு கருத்துவேறுபாடு உள்ள விஞ்சானம்
உறுதிப்படுத்தியது என்று ஆதாரம் இல்லாத ஒரு ஆய்வை சகோ ஆகில் அவர்கள்
முன்வைத்துள்ளார்.
உங்கள்
ஆக்கம் ஆய்வின் வெளிப்பாடு அல்ல மாறாக ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு என்பதை மட்டும்
உணர முடிகிறது.
பிரைவிடையத்தில்
முக்கிய தரப்பான ஜமிய்யதுள் உலமாவின் எந்த தவறுகளையும் சுட்டிக்காட்டாது பிறை
பார்த்த தரப்பை மட்டும் விமர்சித்துவிட்டு செல்லும் ஒரு ஆதங்க வெளிப்பாடே உங்கள்
கட்டுரை என்பதை உணர முடிகிறது.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் இந்த
ரமலானையும் பெருநாளையும் பொருந்திகொள்வானாக.
Post a Comment