நாட்டின் பிரதான சமயங்களின் போதனைகளுக்கும் மரபுகளுக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் அச்சு அல்லது இணைய வெளியீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க பௌத்த சாசன சமய விவகார அமைச்சு அனுமதி கோரியுள்ளது.
இதன் முதற்கட்டமாக பௌத்த மதத்தை அவமதிக்கும் எந்தவொரு வெளியீட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய பௌத்த வெளியீடுகளில் ஒழுங்குவிதி சபையொன்றை அமைப்பதற்கு வகை செய்யும் ஒரு சட்டமூலத்தை மேற்படி அமைச்சு வரைந்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் கீழ் அமையும் சபையில் அமைச்சின் செயலாளர், பௌத்த சாசன ஆணையாளர் நாயகம் ஆகிய உத்தியோகபற்றற்ற அலுவலர்கள் இருப்பர். இதற்கு மேலாக நான்கு பௌத்த பீடங்களினால் நியமிக்கப்படும் அங்கத்தவர்கள் உட்பட 14 அங்கத்தவர்கள் இருப்பர்.
இந்த சட்டமூலம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவரது அங்கீகாரம் கிடைத்ததும் இது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
Post a Comment