ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பெரும்பாலும் ஆளுங்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என்றும் இது தொடர்பாக அலரிமாளிகை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இதற்கிடையே தயாசிறி ஜயசேகரவை ஆளுங்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கும் ஜனாதிபதியின் முயற்சி, பாரம்பரிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களை கலங்கடித்துள்ளது. குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனினும் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமேல் மாகாண சபைக்கான வேட்புமனுத்தாக்கலின் இறுதி தினத்தன்றே தயாசிறி ஜயசேகர ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வார் என்றும் அந்தத் தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருகின்றது.
Post a Comment