ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி ஆகியோர் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்கள் இருவரும் மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அசாத் சாலியை தொடர்புகொண்டு வினவியபோது, இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். எனினும் மத்திய மாகாணத்தில் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பிலான இறுதி முடிவு நாளை திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையினை அடுத்து தீர்மானிக்கப்படும் என அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.
2010ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகனான அனுராத ஜயரட்னவும் மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment