முஸ்லிம் பெண்களில் சொற்ப தொகையினரால் அணியப்படுகின்ற ஓர் முகத்திரையாகும். பொது பல சேனா முஸ்லிம் சமூகத்தை எதிர்க்கின்ற போதெல்லாம் அடிக்கடி விமர்சனத்திற்குட்படுவது இந்த நிகாப் விடயம்தான்;. கடந்த வாரம் (ஜுன் 17) பதுளை நகரில் இடம்பெற்ற பொது பல சேனா கூட்டத்தின் போது, பொது பல சேனாவின் சர்ச்சைக்குரிய பொதுச் செயலாளர் ‘கலகொடத்தே ஞானசார தேரர்,மீண்டும் நிகாபை தடை செய்யக்கோரி உள்நாட்டு வங்கிகளின் சார்பில் அழைப்பு விடுத்தார்.
ஞானசார தேரர் கூட்டத்தில் பேசுகையில், சில உள்நாட்டு வங்கிகள் தன்னோடு தொடர்பு கொண்டு நிகாப் அணிந்து வருகின்ற வாடிக்கையாளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதில் பாரிய பிரட்சினைகளை எதிர்கொள்வதாகவும், இவை வங்கிகளுக்கு பெரும் இடையுறாகவும் இருக்கிறது என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
‘நிகாப் அல்லது புர்கா அணிகின்ற பெண்கள் வங்கிக்குச் சென்று, வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வினவப்படும் போது, வங்கி உத்தியோகத்தர் முகம் திரையிடப்பட்டிருக்கின்ற பெண்ணின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியாதுள்ளது’ என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். ‘குறித்த பெண்ணிடம் முகத்தை காண்பிக்குமாறு வேண்டப்படுகையில் அவள் மறுத்துவிடுகிறாள். இவ்வாறிருக்கையில் ஆடைக்குள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று நாம் எவ்வாறு அறிந்து கொள்வது.?’
அவர் மேலும் குற்றம் சுமத்துகையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கை நாட்டை ஓர் அரேபிய நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அடிப்படைவாதிகள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்களாயின், சிறுபான்மை முஸ்லிம்கள் தகுந்த தண்டணையை எதிர்கொள்வார்கள் என்று கடின குரலில் கூறினார்.
ஞானசார தேரரின் குற்றச்சாட்டை மறுக்கும் வங்கிகள்.
சன்டே லீடர, ஞானசார தேரரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் சில உள்நாட்டு வங்கிகளை தொடர்பு கொண்டது. வங்கிகள் வாய்ச்சொல் தேரரினால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டை அடியோடு மறுத்துவிட்டது. இலங்கையிலுள்ள ஸ்டேட் வங்கி, இலங்கை வங்கி என்பன நிகாப் அணிகின்ற பெண்களுடன் எந்தவொரு அனுபவ ரீதியான பிரச்சினையும் நாம் சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டன.
கொமர்ஷியல் வங்கி உத்தியோகஸ்தகர்கள் கருத்து தெரிவிக்கையில், முகத்திரை அணிகின்ற வாடிக்கையாளர்ளுடன் கொடுக்கல வாங்கல் செய்கையில், அனுபவ ரீதியான எப்பிரச்சினையும் இருந்ததில்லை. அத்தோடு முஸ்லிம் சமூகத்திலிருந்தே அவர்களது விஷேட தேவைகளை கவனித்துக் கொள்ள அவர்களுக்கென்று பிரத்தியேகமான வங்கியியல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறன என்று குறிப்பிட்டனர்.
தேசிய சேமிப்பு வங்கி போன்ற ஏனைய வங்கிகள் குறிப்பிடுகையில், முகத்திரை அணிகின்ற முஸ்லிம் வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல்- வாங்கல்களில் ஈடுபடுகையில், அனுபவ ரீதியிலான எந்தவொரு பிரச்சினைகளையோ, கஷ்டத்தையோ சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டன.
தங்கள் முகங்களை திரையிடுகின்ற அதிகமான முஸ்லிம் பெண்கள், சன்டே லீடருக்கு கருத்து தெரிவிக்கையில் பொதுவாக அவர்கள் வங்கிகளுக்கு செல்வதில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக அவர்களது வங்கி நடவடிக்கைகளை அவர்களது கணவர்மார்களே கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.
எனவே நிகாப் அணிவது ஓர் தெரிவுச்சுதந்திரம். எனவே எல்லா முஸ்லிம் பெண்களும் முகத்திரை அணிவதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்தோடு முகத்திரையானது, பாதையில் செல்கின்ற ஆண்களின் கெட்ட பார்வையை விட்டும் தடுக்கின்ற ஆடையாகும்!
நினைப்பதனை எல்லாம் பேசலாம் என்று பேசிட்டாரோ!! முகம் கழுவ என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுக்கனும்.
+ comments + 1 comments
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஞானஸாரா நீ தொலைந்தால்தான் நாட்டுக்கு நிம்மதி
Post a Comment