அல்-அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் உதித்த புத்தர் சிலை

ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை அல்-அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.06.2013) இரவுதிடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளது. இது தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. 



பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம் மைதானமாகும். இம் மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள்பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.

கடந்த 01.03.2010 ஆம் திகதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி, இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுக்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம் பெற்றுள்ளது.

பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (25.06.2013) குறித்த இடம் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும், அது பாடசாலை மைதானத்திற்கு சொந்தமானது எனவும் தெரிவித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின்விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகத்தினர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Ottamavadi-Buddah
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger