on 11/07/2013
-அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)-
எகிப்தின் களநிலவரம் அதிகமான தரப்புக்கு விளங்கவில்லை. எகிப்தின் நிலவரம் ஊடகங்களில் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை.
எந்த விடயத்தை பேசுவதென்றாலும் விதி அடிப்படை உள்ளது. அதேபோன்று செய்திகளை விமர்சிக்கவும் பரப்பவும் முடிவெடுக்கவும் விதி உள்ளது. அந்த சட்ட விதிதான் இது.
الحكم علي الشئ فرع عن تصوره
“ஒரு விடயத்திற்கு தீர்ப்பு கொடுப்பது அதுபற்றிய களநிலவரதை அறிவதில் தங்கியுள்ளது”
இந்த விதிப்படி எகிப்தின் களநிலவரம் தெரியாமல் பேசுகின்ற நல்லவர்களும் உண்டு நடுநிலை தவருகின்றவர்களும் உண்டு. எகிப்துக்கு வெளியில் சில எழுத்தாளார்கள் ஹிஸ்புன்நூரின் நிலைப்பாட்டை விமர்சிப்பதை இந்த இரண்டு வகையில் ஒன்றில் அடக்கலாம்.
ஹிஸ்புன்நூரின் அரசியல் கொள்கை என்ன?
ஹிஸ்புன்நூர் இக்வானிய அரசில் எந்த அமைச்சு பொறுப்பும் எடுக்கவில்லை. நடுநிலமையாக இருந்துவந்தது. இக்வானிய அரசில் ஹிஸ்புன்நூர் எடுத்த பதவி என்றால் அது ஆலோசகர் பதவி மட்டும்தான். இந்த அடிப்படையில் புதிய எகிப்தின் அரசாங்கத்துக்கு ஆலோசனை செய்ய கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தற்போதைய அரசில் கூட எந்த பதவியும் எடுக்கபோவதில்லை என ஹிஸ்புன்நூர் கட்சி அறிவித்துள்ளது.
களத்திற்கு வெளியில் நின்றுகூட அரசியல் அழுத்த சக்தியாக இருப்பதில் எந்த பிழையும் இல்லை. இக்வானிய அரசு இருக்கும்போது எப்படி இக்வானிய அரசில் கலந்துகொள்ளாமலே ஆலோசனையும் உபதேசமும் செய்து வந்ததோ அதையே இப்போதும் அந்நூர் கட்சி செய்துவருகிறது. எனவே ஹிஸ்புன்நூர் கட்சியின் அரச கொள்கை அன்றும் இன்றும் ஒன்றுதான் என்பது தெளிவாகிறது.
அநியாயகாரனுக்கும் அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கும் உதவி செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்ய முடியும். ஆனால் அநியாயம் செய்பவனுக்கு எப்படி உதவ முடியும் ? என்று சஹாபாக்கள் கேட்டபோது நபி ஸல் அவர்கள் என்ன சொன்னார்களோ அதுவே ஹிஸ்புன்நூர் செய்துவருகிறது.
அநியாயத்தை தடுப்பது என்பது ஆயுதத்தால் மட்டுமா? இல்லவே இல்லை. அநியாயத்தை தடுப்பது பற்றிய உசூல் விதிகள் கீழே கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஹிஸ்புன்நூர் கட்சி செய்துவருகிறது என்பதை எகிப்தின் கள நிலவரத்தை கருத்தில்கொண்டு வாசிப்பவர்களுக்கு புரியும்.
இந்த வகையில் இக்வானிய அரசில் ஹிஸ்புன்நூரின் நிலைப்பாடு எதுவோ அதுவே தற்போதைய ஆட்சிலும் உள்ளது.
ஆனால் ஹிஸ்புன்நூர் ஆட்சி கவிழ்ப்புக்கு முன் இக்வானிய அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கியது. அதை அப்போது இக்வான்கள் செய்திருந்தால் இப்போது இஸ்லாமியர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்திருக்க முடியும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஹிஸ்புன்நூர் வைத்த ஆலோசனை
தேர்தலில் இஸ்லாமியர் சார்பாக ஸலபிகளோ, இக்வான்களோ அல்லது இயக்கத்தில் உள்ள ஒருவரோ போட்டியிடாமல் பொதுவான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது.
இந்த ஆலோசனையை இக்வான்களின் மிகப்பெரிய புள்ளியான யூசுபுல் கர்லாவியும் ஏற்றுகொண்டிருந்தார்.
இந்த ஆலோசனையை இக்வான்கள் கேட்டிருந்தால் இஸ்லாமியர்கள் ஓட்டு பிரியாமல் இருந்திருக்கும். எதிரியின் பலம் குறைந்திருக்கும். இக்வான்கள் இஸ்லாமியர் ஓட்டை பிரித்தாண்டதால் எதிரிகள் தமது ஓட்டு வங்கி பலத்தை அறிந்துகொண்டனர். அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர், வெற்றியும் கண்டனர்.
தேர்தலின் பின்னர் நடந்த இக்வானிய அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஹிஸ்புன்நூர் கட்சி வைய்த்த ஆலோசனைகள் பின்வருமாறு.
பாராளுமன்ற தேர்தலை வைத்தல்
ஜனாதிபதி தேர்தலை வைத்தல்
முர்சி பதவியில் இருக்க வேண்டுமா இல்லையா என்ற சர்வஜன வாக்கெடுப்பை வைத்தல்.
இதில் எந்த ஒன்றையும் இக்வான்கள் ஏற்றுகொள்ளவில்லை. தற்போது சில சலபிய ஆதரவாளர்கள் எதற்காக ஹிஸ்புன்னூரை விமர்சிகின்றனரோ அதே நிலைப்பாட்டுக்கு இக்வான்கள் வரத்தான் போகின்றனர் என்பதை அவர்களின் ஊடகங்கள் ஊடகப்பேச்சாளர்கள் அறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.
ஹிஸ்புன்நூர் சொன்னது சரிதான் என்ற நிலைபாட்டை இக்வான்கள் இன்னும் சில நாட்களில் எடுக்கும்போது சில சலபிய ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும்.
இக்வான்கள் ராணுவத்தை பகைக்காமல் ஹிஸ்புன்நூர் சொன்ன திட்டத்தை ஏற்றுகொள்ளும் நிலை உருவாகிறது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டுவிட்டன.
இன்று காலை தேசிய பாதுகாப்பு மைய்யத்துகு முன்னாள் இக்வானிய ஆதரவாளர்கள் 55 பேர் சுட்டுகொள்ளப்ட்டனர். அவர்களை அங்கு அனுப்பிய தலைவர்கள் எவரும் அங்கு போகவில்லை. இது இக்வானிய தலைவர்கள் தமது கோரிக்கையில் இருந்து பின்வான்கியதட்கு மிகப்பெரிய ஆதாரம். அமைதியான ஆர்ப்பாட்டம் செய்வதாக இக்வானிய தரப்பு சொல்லிவரும் நிலையில் தேசிய பாதுக்கப்பு மைய்யத்தை முற்றுகை இடுவது கலவரத்தை ஏற்படுத்தும் என்பதை இக்வானிய தலைமை அறிந்தே அவர்கள் எவரும் அங்கு போகவில்லை.
சாதூரியமாகவோ சாத்வீகமாகவோ யோசிக்காமல் அதிரடி பேச்சுகள் எதிரியின் பலம் அறியாத அலட்சியபோக்குகள் என்று எத்தனையோ தவறுகளுக்கு சிலரின் தீவிரபோக்கான அறிக்கைகள் வழிவகுத்துவிட்டன.
சில இஸ்லாமிய கட்சிகள் சொன்னதற்கு அமைய அவசர தேர்தல் ஒன்றை முர்சி அறிவித்திருந்தால் தற்போதைய பிரச்சினையில் பல பிரச்சினைகளுக்கு ஆட்சியில் இருந்தவரே தீர்வுகள் சொல்லியிருக்க முடியும். தேர்தலும் நீதமாக நடத்தபட்டிருக்கும்.
இரண்டு தீமைகளில் எதை எடுப்பது ?
இரண்டு தீமைகள் முன்வைக்கப்பட்டு அதில் ஒன்ற எடுக்கும் நிலை உருவாகினால் ஒரு முஸ்லிம் எதை எடுப்பது அறிவுபூர்வமானது? எதை எடுப்பது மார்க்கமானது?
நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு தேர்வு கொடுக்கப்பட்டால் அதில் இலகுவானதை எடுப்பார்கள் என்ற ஹதீஸ் எமக்கு தெரியாமல் இல்லை.
இரண்டு தீமைகளில் குறைந்த தீமை எடுக்கும் உசூல் விதி எகிப்தின் இஸ்லாமிய கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை?
تجويز السكوت على المنكر إذا كان يترتب على انكاره ضرر أعظم .
تجوز طاعة الاَمير الجائر إذا كان يترتب على الخروج عليه شرّ أعظم
انكار المنكر اذا ترتب عليه منكر اكبر منه لا يجوز الانكار عليه
மேலே உள்ள உசூல் விதிகளுக்கு ஏற்ப தீமைகளை எப்படி தடுப்பது?தீமைகள் நடக்கும் என்பது நிரூபணம் ஆகினால் அதை எப்படி கையாள்வது பற்றிய உசூல் விதிகள் அறியாமல் ஹிஸ்புநூர் கட்சி முடிவெடுக்கவில்லை.
இந்த இடத்தில் ஹிஸ்புன்நூர் கட்சியின் நிலைப்பாடு அநியாயம் இழக்கப்பட்ட சகோதரனுக்கும் அணியாம செய்யும் சகோதரனுக்கும் உதவி செய்வதே தவிர அநியாயத்துடன் கூட்டு சேர்ந்து அநியாயம் இழைக்கப்பட்டவனுகு எதிராக நிற்பது அல்ல.
ஹிஸ்புன்நூர் அநியாயம் இழைக்கப்பட்டபோதேல்லாம் எங்கே போயிருந்தனர் இந்த சில ஸலபிய எழுத்தாளர்கள்?
இக்வானிய அரசில் முன்னாள் ஆட்சியின் எச்ச சொச்சங்கள் பதவி வகித்தனர். வெளிவிவகார அமைச்சு உள்விவகார அமைச்சு ஜனாதிபதி ஆலோசகர்கள் என பல பதிவிகளில் இருந்தவர்கள்தான் இக்வானிய அரசை வீழ்த்தினர். ஆனால் அதே நேரம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்குகள் எடுத்த ஹிஸ்புன்நூரின் ஒரே ஒரு பதவியான ஆலோசகர் பதவியை பறித்தனர்.
தீமைகளை கண்டபோதெல்லாம் இக்வானிய ஜனாதிபதிக்கு ஆலோசனை செய்த ஹிஸ்புன்நூரின் ஆலோசகர் தேவை இல்லையாம் இக்வான்களுக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கும் துரோகம் செய்யும் முபாரக்கின் எச்ச சொச்சங்கள் இக்வானிய அரசில் உயர் பதவி வகிப்பார்கலாம் என்பது எந்த வகையில் நியாயம்?
தமது கட்சிக்கு நடந்த அவமானத்தை கூட அவர்கள் நடுநிலமையாக சமாளித்தார்கள். இந்த அநியாயத்தின் பின்பு கூட ஹிஸ்புன்நூர் கட்சி ஆர்ப்பாட்டமோ இக்வானிய அரசை எதிர்க்கவோ செய்யவில்லை.
மக்கள் பிழையாக விளங்கிவிடக்கூடாது என்பதற்காக கருத்து சுதந்திர அடிப்படையில் ஹிஸ்புன்நூர் கட்சியின் ஜனாதிபதி ஆலோசகர் இல்முத்தீன் என்பவர் முர்சியால் பதவி நீக்கம் செய்யப்பட நியாயமான காரணத்தை மட்டும் தருமாறு வேண்டினரே தவிர ஆர்ப்பாட்டமோ குழப்பமோ அவர்கள் செய்யவில்லை.
எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு அரசாங்கம் இருந்தாலும் அவர்களின் தீமையின் அளவுக்கு ஏற்ப எதிர் நகர்வு இருக்க வேண்டும். சவூதி அரசு கட்டார் அரசு அநியாயம் செய்தால் அங்குள்ள ஸலபிகள் எதற்காக் தட்டி கேட்பதில்லையோ அதே காரணம்தான் எகிப்திலும் சில இடங்களில் சில கட்டங்களில் காணப்படும்.
ஹிஸ்புன்னூரை பொறுத்தவரை எகிப்தின் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதில்லை என்ற நிலைபாட்டில் உள்ள கட்சியாகும். ஸலபிய சிந்தனை உள்ள ஒருவரோ அல்லது இக்வானிய உருப்பினர் ஒருவரோ ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் எதிரிகள் எப்படி எப்படியெல்லாம் இஸ்லாத்தை கொச்சைபப்டுத்துவார்கள் என்பதை ஹிஸ்புன்நூர் விளங்கிவைத்திருநதது.
சவூதி, கட்டார், பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வது பிழை என்று ஸலபிகள் எதற்காக கருதுகின்றனரோ அதுபோன்றே பல சிந்தனைப்பிரிவுகளின் கோட்டையான எகிப்தில் இக்வானியோ ஸலபியோ ஜனாதிபதியாக வருவது என்பது கலநிலவரத்துகு பொருத்தம் இல்லாதது என்று ஹிஸ்புன்நூர் கருதுகிறது.அதையும் தாண்டி யாராவது வந்துவிட்டால் அவர்களுக்கு ஆலோசனை செய்யும் ஒரு தரப்பாக ஹிஸ்புன்நூர் இருக்கின்றது.
எனவேதான் எகிப்தின் எல்லா தரப்பையும் முற்றுமுழுதாக திருப்திப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு திருப்திப்படுத்தும் விதமாக கட்சி சார்பற்ற ஒருவரை ஜனாதிபதியாக வைக்க வேண்டும் என்று அந்நூர் கட்சி சொல்லிவந்தது.
அதேபோன்றே இக்வானிய ஆட்சிக்கு எதிர்ப்பு வந்தபோதும் பாராளுமன்ற தேர்தலை வைக்குமாறு கோரியது அதற்கும் இக்வான்கள் செவிசாய்க்கவில்லை.
எதிர்ப்பின் நிலைமை உச்சகட்டத்தை அடைந்தபோது சர்வஜன வாக்கெடுப்பை வைக்குமாறு இக்வானிய அரசை அந்நூர் கட்சி கோரியது அதையும் இக்வானிய அரசு செவிசாய்க்கவில்லை.
எதிர்ப்பின் நிலைமை உக்கிர நிலையை அடைந்தபோது ஜனாதிபதி தேர்தலை அறிவிக்குமாறு அந்நூர் கட்சி இக்வானிய அரசை பாதுகாக்க ஆலோசனை வழங்கியது. தேர்தல் ஒன்றின் அறிவிப்பை கேட்டதும் அரச எதிர்ப்பு மக்கள் கொந்தளிப்பு குறையும். நிலைமை ஓரளவு சீராகும் என்று கருதி இந்த தேர்தல் அறிவிப்பை செய்ய அந்நூர் கட்சி கோரியது.
இந்த கோரிக்கையில் எது குறைந்த தீமை? ஆட்சி பறிபோவது குறைந்த தீமையா? ஆட்சியில் இருந்தவாறே ஒரு தேர்தலை தமது கண்காணிப்பில் நீதியாக நடத்த எத்தனிப்பது குறைந்த தீமையா?
இதில் குறைந்த தீமையான தேர்தலை வைத்து இக்வானிய ஆட்சியை காப்பற்றுமாறே அந்நூர் கட்சி ஆலோசனை வழங்கியது.
இந்த ஆலோசனைகளை மறுத்ததால்தான் முர்சியின் பதவி பறிபோனது என்பதை தற்போதைய அரசியல் களநிலவரம் எமக்கு பாடம் சொல்லித்தருகிறது.

Post a Comment