மாளிகாவத்தை பாதாள உலக கோஷ்டி தலைவரான மொஹமட் அஷ்மிர் என்றழைக்கப்படும் ‘மாமாஷிமின்’ துப்பாக்கிச்சூட்டில் நேற்றிரவு பலியாகியுள்ளார்.
அவரது சடலம் கொழும்பு-7, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்களை போல வேடமிட்டு முகமூடி அணிந்திருந்த குறித்த நபர் மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரென்றும் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment