எகிப்தில் மொர்ஸி ஆதரவாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு



எகிப்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ முகாமொன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் அதிபர் மொர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவக் கட்டடத்துக்கு முன்பாகவே, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மொர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், 35 பேர்வரையில் பலியானதாகக் கூறுகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதிகாலை தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி காவல்துறையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இராணுவத் தரப்போ, பயங்கரவாதக் கும்பலொன்று முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகக் கூறுகிறது.
இதற்கிடையே,  அல்- நூர் கட்சி, இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
இன்றைய தாக்குதல் சம்பவம் உண்மையில் ஒரு படுகொலை நடவடிக்கை என்று அக்கட்சி வர்ணித்துள்ளது.

ஹிஸ்புன்நூர் கட்சி எப்போதும நிதானமான முடிவிலேயே இருக்கும்.முர்சிஅரசை ஆதரித்தும் வந்தது அதனுடன் முரண்பட்டும் வந்தது.அதேபோல தற்போதைய எகிப்திய அரசுக்கு நல்லதென்றால் ஆதரவு இல்லை என்றால் ஆதரவு விலக்கல் என்ற நேர்த்தியான நிலைபாட்டில் உள்ளது.ஆனால் ஹிஸ்புன்நூர் இக்வானிய அமைச்சரவையில் எப்படி அமைச்சு பதவி எடுக்க மாட்டேன் என்று சொன்னதோ அதே போன்றே தற்போதைய அரசிலும் அமைச்சு பதவிகள் எடுக்க மாட்டோம் என்று எப்போதோ அறிவிதுவிட்ட்டது.

எகிப்தில் எந்த அரசு வந்தாலும் ஆலோசனை வழங்கும் ஒரு நடுநிலைவதியாகவே ஹிஸ்புன்நூர் இருந்துவருகிறது.

பொதுமக்கள கொல்லபடுகின்றனர் இக்வானிய தலைவர்கள் பாதுகாப்பாக மக்கள் கேடயத்துக்குள் உள்ளனர்.

ஹிஸ்புன்நூர் எதை எதிர்வு கூவியதோ அது நடந்தது.

மக்களை பாதைகளில் இறக்க வேண்டாம் என்று ஹிஸ்புன்நூர் சொல்லியும் கேட்கவில்லை இக்வான்கள்.ஆர்பாட்டம் செய்வதற்கு என்று சில இடங்கள் உள்ளன அதை தாண்டி தேசிய பாதுகாப்பு நிலையத்தை ஆக்கிரமிக்க சில இக்வானிய கடும்போக்கு தலைவர்களால் அப்பாவி மக்கள் தூண்டப்பட்டு அங்கு சென்றதால் ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இக்வானிய தலைவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களில் ஒரு இக்வானிய தலைவர்கூட கொல்லப்படவில்லை.




Share this article :

+ comments + 1 comments

July 14, 2013 at 9:33 PM

இப்பவே இஸ்ரேல்ட கணக்குகலப்பாத்து வங்கிகொங்க.ரொம்ப மோசமானவங்கள் கடைசிக்கு தாரண்டு சொல்லிடு தரமாட்டான்வல்.. ஆனா உங்கள பாராட்டனும் இஸ்ரேல பாதுகாக்க இவலவ் முயற்சி செய்றீங்களே

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger