தங்களது இருப்பிட அந்தஸ்தை சட்டபூர்வமாக்க, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நவம்பர் மாதம் வரை இந்த காலக்கெடு தரப்படுகிறது. இதன் பிறகு முறையான ஆவணம் இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்று உள்துறை அமைச்சக அறிக்கை ஒன்று கூறுகிறது.
முன்பு விதிக்கப்பட்டிருந்த மூன்று மாத பொது மன்னிப்புக்கான கால அவகாசம் நாளை ( புதன்கிழமை) காலாவதியாகும் நிலையில் இப்போது வந்திருக்கும் இந்த உத்தரவினால் லட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமான ஒரு கால அவகாசம் கிடைத்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து வந்து சரியான ஆவணங்களின்றிப் பணிபுரியும் தொழிலாளர்களின் மீது தான் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கிலும், சௌதி அரேபியாவின் பிரஜைகள் மத்தியில் நிலவும் அதிகரித்து வரும் வேலையின்மையை சமாளிக்கும் நோக்கிலும் , சௌதி அரசு இந்த ஆண்டு முன்னதாக தனது சட்டங்களைத் திருத்தியது.
சௌதி அரேபியாவில் இருக்கும் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர் என்றும் , இது போன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம் , இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஏமன் போன்ற நாடுகளுக்கு ஒரு முக்கியமான வருவாயாக இருந்துவருகிறது.
Post a Comment