இலங்கையில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அது விடயமாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவது என்று முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்க செய்தித்தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஒரு தேசமாக வாழ்வதற்காக இலங்கை மக்களை வலுப்படுத்துவதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யவும், அறிக்கையிடவும் அமைக்கப்பட்ட சிறப்பு நாடாளுமன்ற தெரிவிக்குழு, அது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை பெறுவது என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் பிரதிநிதிகளை இன்று முதல் அது சந்திக்கும் என்றும், இதில் ஆர்வம் உள்ள தனிநபர்கள், அரசியல் கட்சிகள், சிவில் மற்றும் மத அமைப்புக்கள் தமது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் செவ்வாயன்று முதல் தடவையாக குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தெரிவுக்குழு கூடியுள்ளது.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவுக்கு தமது பிரதிநிதிகளை இதுவரை நியமிக்கவில்லை.
ஜூலை 26ஆம் திகதி தெரிவுக்குழு மீண்டும் சந்திக்கும்.
Post a Comment