இராணுவத் துணைக்குழுக்களான பொதுபல சேனா மற்றும் ராவணா சக்தி களத்தில்
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மேனன், இலங்கையில் இருந்து புறப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிக்குகளை கொண்ட இராணுவத் துணைக்குழுக்களான பொதுபல சேனா மற்றும் ராவணா சக்தியை பயன்படுத்தி, இந்தியாவை வம்பிழுக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
இந்த அமைப்பினர் இந்திய தூதரகத்திற்கு எதிரில், புத்தகாயா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக கூறி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியதுடன்இ அது பின்னர் இந்திய எதிர்ப்பு போராட்டமாக மாறி இருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
ஆயுத கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பிய குற்றத்தை ஏற்றுக்கொண்ட புலிகளின் பயங்கரவாதி ஒருவரை அண்மையில் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தது,ஆனால், புத்தகாயாவில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இந்திய அரசாங்கம் 04 பேரை இதுவரை கைதுசெய்துள்ளது.
இந்த சம்பவத்தை கூறாது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரர், இலங்கையின் மாகாண சபை முறைமை தொடர்பாக இந்தியா தலையிடுவதை எதிர்த்து இன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
‘இலங்கையின் பிரச்சினைகளில் எந்த அதிகாரத்தை கொண்டு இந்தியா தலையிடுகிறது. இது எங்கள் நாடு, இது இந்தியாவின் காலனித்துவ நாடல்ல, இது இறைமையுள்ள நாடு, காணி அதிகாரங்களையும் காவற்துறை அதிகாரங்களையும் வழங்குமாறு கூறுகின்றனர். இயலாமை காரணமாக நாங்கள் அமைதியாக இருப்பதாக இந்தியா நினைக்கின்றது. இலங்கை அரசாங்கம், இந்தியர்களுக்கு நாட்டுக்கு வந்து செல்ல சுதந்திர விசாவை வழங்குகிறது. எனினும் இலங்கையை சேர்ந்த வயதான பக்தர்கள் இந்தியாவுக்கு யாத்திரை செல்ல பல கிலோ மீற்றர் தொலைவு வரை வரிசையில் நிற்க வேண்டும். இப்படித்தான் இந்தியா இலங்கையர்களை கவனிக்கின்றது’ என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment