காவிக்குக் கவி...... - Roohul Razmi


எண்ணையும் திக்கையும் 
காவினால் காவி
எண்ணையும் பிக்கும்
காவப்பட்டாலும் காவி

மானத்தை மறைக்க
கலராடை
மானங்கெட்டவனை மறைக்க
காவியாடை

மதிப்பாய் இருப்பவன் 
ஆடையைக் காவினான்
மதிப்பே இல்லாதவன்
காவியில் ஆடினான்

மாதருக்கு தன்மானம் 
நெஞ்சில் துணி
தேரருக்கு வருமானம்
மஞ்சள் துணி

சாவி எடுத்திருந்தால் 
மாளிகையில் நீ களிக்கலாம் 
காவி உடுத்திருந்தால்
மாளிகையில் தீ குளிக்கலாம்

கண்ணுக் குட்டி 
கண்ணைக் கொட்டி 
பால் கொள்ளை..
காவியைக் கட்டி
எண்ணைக் கொட்டி
பகல் கொள்ளை..

பசு ஒரு சாதுவான 
மிருகம்
சாது ஒரு விசமான
மிருகம்

பசுவைக் காக்க
தன்னையே தாக்கினால் 
பசியைப் போக்க 
உன்னையா ஆக்குவது?

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger