13வது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டால், தென் தமிழீழத்தில், சிறிலங்கா ஆட்சி செய்து வரும் மாகாண சபையைக் கலைத்து விடுவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ளாமை காரணமாக அந்தக் கட்சி அதிருப்தியடைந்துள்ள நிலையில் அரசிலிருந்து வெளியேறும் சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாகாண சபையிலும் அரசுக்கு வழங்கும் ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக் கொள்ளுமானால் அரசாங்கத்தால் தனித்துச் செயற்பட முடியாத நிலையேற்படும் இவ்வாறானதொரு நிலையில் அந்த மாகாண சபையைக் கலைப்பது தொடர்பிலேயே சிறிலங்கா அரசு கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment